மெய்மறக்கச் செய்யும் டிசைன்... ஆடியின் புதிய ஹேட்ச்பேக் கார்!

By Saravana

படு கவர்ச்சியான தோற்றம் கொண்ட புதிய ஹேட்ச்பேக் காரை ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆடி எஸ்1 என்ற இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடல் ஜெனீவா மோட்டார் ஷோவில் தரிசனம் கொடுத்து வருகிறது.

இது ஒரு பெர்ஃபார்மென்ஸ் காராகவும் நிலைநிறுத்தப்படுகிறது. எனவே, அதற்குண்டான பல்வேறு தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இரு வேரியண்ட்டுகள்

இரு வேரியண்ட்டுகள்

இரு கதவுகள் கொண்ட மாடல் எஸ்1 என்ற வேரியண்ட்டாகவும், 4 கதவுகள் கொண்ட மாடல் எஸ்1 ஸ்போர்ட்பேக் என்ற வேரியண்ட்டாகவும் வந்துள்ளது.

டிசைன்

டிசைன்

பெரிய கிரில், ஸினான் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில்லைட்டுகள், குவாட் எக்சாஸ்ட் மற்றும் ஸ்பிளிட் ஸ்பாய்லர் போன்ற அம்சங்கள் காரின் கவர்ச்சியை கூட்டுகின்றன.

 இன்டிரியர்

இன்டிரியர்

ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், பிரத்யேக வண்ண நூலிலான தையல்கள், ஸ்டீல் பெடல்கள் போன்றவையும் இந்த காரை ஸ்போர்ட்ஸ் மாடலுக்கான தகுதிப்பெற செய்கின்றன. அதுமட்டுமா, இதன் எஞ்சினும் பவர்ஃபுல்தான்...

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 228 எச்பி ஆற்றலையும், 370 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 5.8 வினாடிகளில் எட்டிவிடும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த பவர்ஃபுல் காருக்கு ஏற்றதாக 4 இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன், எலக்ட்ரானிக் டிஃபரென்ஷியல் லாக் மற்றும் வீல் செலக்டிவ் டார்க், முன்சக்கரத்தில் 310மிமீ டிஸ்க் பிரேக்குகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. 17 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காருக்கு 18 இஞ்ச் அலாய் வீல்கள் ஆப்ஷனலாக கிடைக்கும்.

வீடியோ

வீடியோ

மெய்மறக்கச் செய்யும் இந்த புதிய ஆடி காரின் முழுமையாக கண்டு ரசிக்க வேண்டுமா? எங்களது ஃபேஸ்புக் பக்கத்திற்கு வந்து விடுங்களேன்!!

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2014, 11:12 [IST]
English summary
Previewed initially through images last month, the new flagship Audi A1 model, the S1 has made its official debut at the Geneva Motor Show 2014.
மேலும்... #audi #s1 #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+