ஆடியின் அழகான, அடக்கமான புதிய எஸ்3 கேப்ரியோலெட்!

By Saravana

ஆடியின் எஸ்3 வரிசையில் ஹேட்ச்பேக், செடான் கார்களை தொடர்ந்து புதிய கன்வெர்ட்டிபிள் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எஸ்3 ஹேட்ச்பேக், செடான் கார்களுக்கு கிடைத்த வரவேற்பை போன்றே இந்த புதிய கார் மாடலுக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஆடி எஸ்3 கேப்ரியோ மாடலில் 296 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ஆடியின் 6 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

ஹேட்ச்பேக், செடானை விட 200 கிலோ கூடுதல் எடை கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டிவிடும்.

திறந்துமூடும் கூரை

திறந்துமூடும் கூரை

ஆடி எஸ்3 கேப்ரியோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் கூரை 18 வினாடிகளில் திறந்து மூடும் வசதி கொண்டது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

19 இஞ்ச் அலாய் வீல்கள், பை ஸினான் ஹெட்லைட், ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

விற்பனை

விற்பனை

வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் இந்த புதிய ஆடி எஸ்3 கேப்ரியோ மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

விலை

விலை

34,720 பவுண்ட் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செடான் மாடலைவிட 4,000 பவுண்ட் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2014, 12:18 [IST]
English summary
Audi S3 Cabriolet is by far the hottest compact convertible to be launched. It will join the S3 Sedan and Hatch that are already doing well. When launched expected it to be priced at around $75,000.
மேலும்... #audi #s3 #four wheeler #ஆடி #எஸ்3
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+