3-ஆம் தலைமுறை புதிய ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

By Saravana

புதிய தலைமுறை ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் ஜெனீவா மோட்டார்ஸ் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட டிசைனில் சிறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனை துவங்க இருக்கும் இந்த மூன்றாம் தலைமுறை மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் டிடி மற்றும் டிடிஎஸ் என்ற இரு வேரியண்ட்டுகளில் மூன்று எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரின் படங்கள், எஞ்சின் விபரங்கள் மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

184 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின், 230 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது. அதிகபட்ச பவர் கொண்ட டிடிஎஸ் மாடலில் 310 எச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கம் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

 முகப்பு தோற்றம்

முகப்பு தோற்றம்

ஸினான் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் லைட்டுகளின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க கிரில் க்ரோம் பூச்சுடன், பெரிதாக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு தரமும் மேம்பட்டுள்ளது.

பக்கவாட்டு தோற்றம்

பக்கவாட்டு தோற்றம்

பெரிய வீல் ஆர்ச்சுகள், மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் காரின் தோற்றத்தை கம்பீரமாக காட்டுகின்றன. ரியர் வியூ கண்ணாடிகளும் மெட்டல் கிரே வண்ணத்தில் தனித்துவமாக தெரிகின்றன.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

எல்இடி டெயில் லைட்டுகள், 4 எக்சாஸ்ட் பைப்புகள் ஆகியவை இந்த ஸ்போர்ட்ஸ் காரின் பின்புறத்தை வசீகரமாக்குகின்றன.

 இன்டிரியர்

இன்டிரியர்

கருப்பு நிறத்திலான இன்டிரியர் டிசைனும் மிக மிக கவர்ச்சியாக உள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது. காரின் வேகம், ஆயில் ப்ரஷர், எரிபொருள் போன்றவற்றின் 12.3 இஞ்ச் திரை மூலமாக பெறலாம்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.3 வினாடிகளில் தொட்டு விடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தை தொடும் ஆற்றல் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2014, 13:40 [IST]
மேலும்... #audi #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+