குறைவான விலையில் வரும் ஆடியின் புதிய என்ட்ரி லெவல் செடான் அறிமுகம்!
ஆடி நிறுவனத்தின் குறைந்த விலை செடான் காராக விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஏ3 கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் ஆடியின் கேம் சேஞ்சர் காராக குறிப்பிடப்படும் இந்த புதிய ஏ3 கார் பென்ஸ் சி கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுடன் போட்டி போடும்.

விலை
பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு போட்டியாக வரும் இந்த புதிய ஆடி கார் பென்ஸ் ஏ கிளாஸ், பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களை விட சற்று அதிக விலையில் வர இருக்கிறது. எனவே, இரு செக்மென்ட்டில் இருக்கும் கார்களுக்கு நெருக்கடியை தரலாம்.

பகல்நேர ரன்னிங் விளக்குகள்
குறைவான விலை காராக இருந்தாலும், தனது கார்களில் நிரந்தர அம்சமாக இடம்பெறும் பகல்நேர ரன்னிங் விளக்குகளை இந்த காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் வழங்கியுள்ளது.

எஞ்சின்
இந்தியாவில் முதலாவதாக 180 பிஎச்பி திறன் கொண்ட 1.8 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர, 140 பிஎச்பி 1.4 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 184 பிஎச்பி பவர் கொண்ட 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

விற்பனைக்கு எப்போது?
இந்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








