பரபரப்பான 24 ஹவர்ஸ் லீ மான்ஸ் ரேஸில் ஆடி முதலிடம்!

By Saravana

பரபரப்பாக நடந்த முடிந்த லீ மான்ஸ் 24 ஹவர்ஸ் ரேஸில் ஆடி முதலிடத்தை பிடித்தது. டொயோட்டா, போர்ஷே நிறுவன கார்களின் கடும் போட்டியை சமாளித்து இந்தாண்டு லீ மான்ஸ் ரேஸில் ஆடி முதல் இரண்டு இடங்களை ஆடி கார்களே பிடித்து அசத்தின. உலக புகழ்பெற்ற இந்த ரேஸில் 13வது முறையாக ஆடி அணி சாம்பியனாகியுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்ற ஆடியின் மூன்று கார்களில் 2ம் எண் கொண்ட ஆர்18 இ- ட்ரோன் கார் முதலிடத்தை பெற்றது. இந்த காரை மார்செல் ஃபாஸ்லர், ஆன்ட்ரே லாட்டெரர் மற்றும் பெனாய்ட் ட்ரீலூவர் ஆகிய மூவரும் ஓட்டினர். மொத்தம் 376 சுற்றுகளை ஓட்டி முதலிடத்தை பிடித்தனர்.

Le Mans Race

ரேஸில் முதலிடம் பிடித்த 2ம் எண் கொண்ட ஆடி கார் பயிற்சியின்போது மோசமான விபத்தில் சிக்கியது. ஆனால், ஆடி எஞ்சினியர்கள் அந்த காரை மறுகட்டுமானம் கொடுத்து களத்தில் இறக்கினர். அந்த காரே முதலிடம் பிடித்தது.

இரண்டாவது இடத்தையும் ஆடி காரே பெற்றது. இந்த காரை டாம் கிறிஸ்டென்சன், மார்க் ஜெனி, லூகாஸ் டி கிராஸி ஆகிய மூவரும் செலுத்தினர். மூன்றாம் எண் கொண்ட ஆடியின் மற்றொரு கார் விபத்தில் சிக்கி போட்டியிலிருந்து வெளியேறியது. மூன்றாவது இடத்தை டொயோட்டா பிடித்தது.

துவக்கத்தில் டொயோட்டா டிஎஸ்ஓ40 ஹைபிரிட் கார் ஆடி கார்களுக்கு கடும் போட்டி கொடுத்தது. ஆனால், விபத்து காரணமாக நேரத்தை விரயமாக்கிக் கொண்டுவிட்டது. இதனால், மூன்றாம் இடத்தை பெற்றது.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2014, 15:52 [IST]
English summary
Marcel Fassler, Andre Lotterer and Benoit Treluyer overcame turbocharger problems to drive Audi to its 13th title at the 24 Hours of Le Mans on Sunday. It was the trio's third victory in the world's most famous endurance race. Their Audi No. 2 finished three laps ahead of Audi No. 1 driven by Lucas di Grassi, Marc Gene and defending champion Tom Kristensen.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+