டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 'லைவ்' கவரேஜ்!
டெல்லியில் நடைபெற இருக்கும் 12- வது சர்வதேச ஆட்டோமொபைல் திருவிழாவின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வாசர்களுக்கு வழங்க இருக்கிறது.
இதுவரை பிரகதி மைதானத்தில் நடந்து வந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ இந்த முறை இரு இடங்களில் நடைபெற உள்ளது. வாகன கண்காட்சி கிரெட்டர் நொய்டாவிலும், வாகன உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கான கண்காட்சி பிரகதி மைதானத்திலும் நடைபெற உள்ளது.

கிரெட்டர் நொய்டாவில் நாளை நடைபெற இருக்கும் பல்வேறு புதிய கார் மாடல்களின் அறிமுக விழாக்கள் மற்றும் இதர நிகழ்வுகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளை மறுதினம் துவக்க விழா நடைபெற உள்ளது. வரும் 7ந் தேதி முதல் 11ந் தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த தொகுப்பு பக்கத்தில் தொடர்பில் இருங்கள்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்கு வாசகர்களை இனிதே வரவேற்கிறோம்.


Click it and Unblock the Notifications








