2015ல் 3 புதிய பைக் மாடல்களை களமிறக்கும் பஜாஜ்!
அடுத்த ஆண்டு 3 புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தால் விற்பனையில் பின்தள்ளப்பட்ட பஜாஜ் ஆ்டோ நிறுவனம் மீண்டும் தனது இரண்டாவது பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இதற்காக, பல புதிய மாடல்களை வரிசைக்கட்டுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் குறைவான விலை பைக் மாடலான பிளாட்டினா மாடலுக்கு புத்துயிர் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு பல்சர் வரிசையில் 200எஸ்எஸ் மற்றும் 400எஸ்எஸ் ஆகிய பைக் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய மாடல்கள் மூலம் விற்பனையில் சாதித்துக்காட்டவும் அந்த நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.


Click it and Unblock the Notifications








