சிஎன்ஜியில் இயங்கும் பஜாஜ் ஆர்இ60 தீவிர சோதனை ஓட்டம்
பாதுகாப்பு அம்சங்கள் குறைவான ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக புதிய நான்கு சக்கர வாகனத்தை பஜாஜ் ஆட்டோ வடிவமைத்தது. இதுபோன்ற புதிய வகை வாகனங்களை குவாட்ரிசைக்கிள் என்ற பெயரில் அங்கீகரித்துள்ளது மத்திய அரசு.
பஜாஜ் ஆர்இ60 என்ற பெயரிலான இந்த புதிய வகை வாகனம் முதலில் 220சிசி டிடிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினுடன் பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த குவாட்ரிசைக்கிள் ரக வாகனத்தின் சிஎன்ஜி மாடலையும் தற்போது தீவிர சோதனை நடத்தி வருகிறது பஜாஜ்.

சோதனை ஓட்டம்
புனேயிலுள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையை சுற்றியுள்ள பகுதியில் இந்த புதிய சிஎன்ஜி மாடல் தற்போது தீவிர சோதனை ஓட்டத்தில் இருக்கிறது.
Source: Motorbash

மைலேஜ்
ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ.,க்கும் மேல் மைலேஜ் தரும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சிஎன்ஜியில் இயங்கும் ஆர்இ60 மாடல் பெட்ரோல் மாடலைவிட கூடுதல் மைலேஜ் தரும் என்று கருதப்படுகிறது.

சிக்கனமான வண்டி
தற்போது புதிய ஆட்டோரிக்ஷாக்கள் லிட்டருக்கு அதிகபட்சம் 30 கிமீ வரை மைலேஜ் தருகின்றன. இதைவிட கூடுதல் மைலேஜ் தரும் வகையில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஆர்இ60 வாகனம் எரிபொருள் செலவீனத்தில் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

பாதுகாப்பு
நான்கு சக்கர வாகனமான இதில் ஆட்டோரிக்ஷாக்களை விட கூடுதல் பாதுகாப்பு கொண்டதாக இருக்கும். 4 பேர் செல்வதற்கான இடவசதியையும் கொண்டிருக்கும். கதவுகளுடன் வருவதும் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.

ஒப்பிட முடியாது
ஆட்டோரிக்ஷாவுடன் முழுமையாக ஒப்பிட முடியாது என்றாலும், பஜாஜ் ஆட்டோ தனது ஆட்டோரிக்ஷா மார்க்கெட்டை வலுப்படுத்தி, அடுத்த நிலையை எட்டும் வகையிலேயே இந்த வாகனத்தை களமிறக்க உள்ளது. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த மார்க்கெட்டில் களமிறங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








