பென்ட்லீ எஸ்யூவியின் டீசர் வெளியீடு: 2016ல் அறிமுகம்!

By Saravana

பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் பென்ட்லீ எஸ்யூவியின் முதல் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் EXP-9 என்ற குறியீட்டுப் பெயரில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

போர்ஷே கேயென் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஆடம்பர எஸ்யூவி மாடல்களை விட இது மிக சொகுசாக இருக்கும் என்று பென்ட்லீ வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. உலகின் மிக சிறந்த ஆடம்பர எஸ்யூவியாக வரும் இந்த மாடலுக்காக வெளியிடப்பட்டிருக்கும் டீசர் படம் மற்றும் இதர விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தயாரிப்பு நிலை டீசர்

தயாரிப்பு நிலை டீசர்

கான்செப்ட் நிலையிலிருந்து தற்போது தயாரிப்பு நிலையை பென்ட்லீ எஸ்யூவி அடைந்திருப்பது டீசர் மூலம் புலனாகிறது.

டிசைன்

டிசைன்

டீசரில் பென்ட்லீயின் டிரேட்மார்க் முகப்பு கிரில், இரட்டை ஹெட்லைட்டுகள் போன்றவற்றுடன் வசீகரிக்கிறது. தாழ்வான ஏர்டேம் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரில் தனது கைவண்ணத்தை முழுமையாக காட்டியிருக்கிறது பென்ட்லீ. மரவேலைப்பாடுகள் நிறைந்த டேஷ்போர்டு, உயர் ரக லெதர் பினிஷ், குரோம் பூச்சுகள் போன்றவை இந்த எஸ்யூவியின் அந்தஸ்தை பளிச்சென்று காட்டுகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஆடம்பர எஸ்யூவியில் 6.0 லிட்டர் டபிள்யூ 12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், இது 500 முதல் 600 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் இருக்கும். ஹைபிரிட் மாடலும் பரிசீலனையில் உள்ளது.

 விலை

விலை

1.40 லட்சம் பவுண்ட் விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஸ்டமைஸ் செய்ய விரும்பினால், இந்த விலை இருமடங்கு கூடுதலாக இருக்கும்.

 ஆடம்பர எஸ்யூவி

ஆடம்பர எஸ்யூவி

வரும் 2016ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடல் அதிசக்திவாய்ந்த மாடலாகவும், உலகின் மிக சொகுசான எஸ்யூவியாகவும் இருக்கும் என்று பென்ட்லீ தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2014, 11:12 [IST]
English summary
For the first time after previewing the EXP-9 SUV concept at the Geneva Motor Show 2012, Bentley has released the first teaser image of what is the production version of the SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+