இந்தியாவில் முதல் கார் மியூசிக் சிஸ்டம் ஷோரூமை திறந்த பிளாபுங்கட்
கார் மியூசிக் சிஸ்டம் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த பிளாபுங்கட் நிறுவனம் இந்தியாவில் முறைப்படி கால் பதித்துள்ளது. தனது முதலாவது ஷோரூமை கேரள மாநிலம், கொச்சியில் திறந்துள்ளது.
இந்த புதிய ஷோரூமில் பிளாபுங்கட் நிறுவனத்தின் மியூசிக் சிஸ்டம் மாடல்கள் மற்றும் நேவிகேஷன் சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மாடல்களையும், தயாரிப்புகளையும் சரியான விலையில் வாங்க முடியும். இந்த புதிய ஷோரூம் மூலம் தேர்வு செய்வதும் எளிதாக இருக்கும் என பிளாபுங்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் 20 புதிய ஷோரூம்களை திறக்க இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் சிஇஓ லார்ஸ் பிளேக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கேரளாவிற்கான அங்கீகாரம் பெற்ற வினியோகஸ்தராக நியமிக்கப்பட்டிருக்கும் டாப்மோஸ்ட் குழுமம் கொச்சியில் உள்ள பிளாபுங்கட் ஷோரூமை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








