பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!
இந்தியாவில் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் வரிசையில் மாடல்களில் பொருத்தப்படும் பாடி கிட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரின் ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டில் சில கூடுதல் அம்சங்களை சேர்த்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது இந்த புதிய லிமிடேட் எடிசன் கார்.

லிமிடேட் எடிசன்
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மொத்தம் 111 பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்கள் மட்டுமே எம் எடிசனில் விற்பனை செய்யப்படும்.

முன்பதிவு
இந்த காரை வாங்க விரும்புவர்களுக்கு இன்னும் 3 தினங்களே அவகாசம் உள்ளது. ஆம், வரும் 25ந் தேதிக்குள் முன்பதிவு செய்துவிட வேண்டும். கருப்பு நிற முன்பக்க கிரில், ரியர் ஸ்பாய்லர், கருப்பு நிறத்தில் கோடுகள் போன்ற ஸ்டிக்கர் ஆகியவை கூடுதலாக இருக்கின்றன. பின்புறத்தில் புதிய பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, புதிய டிசைன் அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன.

எஞ்சின் ஆப்ஷன்
எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. பெட்ரோல் மாடலில் 136 எச்பி ஆற்றலையும், 220 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 1.6 லிட்டர் எஞ்சின் இருக்கிறது. இது 0- 100 கிமீ வேகத்தை 8.7 வினாடிகளில் எட்டும்.

டீசல் மாடல்
டீசல் மாடலில் 143 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 0-100 கிமீ வேகத்தை 8.6 வினாடிகளில் எட்டிவிடும். பெட்ரோல், டீசல் என இருமாடல்களிலும் 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது.

விலை
சாதாரண 1 சீரிஸ் காரின் ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மாடலைவி ரூ.2.5 லட்சம் கூடுதலான விலையில் இந்த புதிய எம் எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்ப்டடுள்ளது. மும்பையில் ரூ.40.61 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்த புதிய மாடல் கிடைக்கும் என டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போட்டா போட்டி
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எடிசன்1 என்ற பெயரில் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதற்கு போட்டியாக பிஎம்டபிள்யூ நிறுவனமும் லிமிடேட் எடிசன் மாடலை விட்டுள்ளது. மேலும், ஆடி ஏ3 செடான் காரின் வருகையும் நெருக்கடியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








