பிரதமர் மோடி பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

By Saravana

பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ ஹைசெக்யூரிட்டி காரின் புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்திய அதே காரை தனது அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த விஷயம் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் ஹை செக்யூரிட்டி மாடலுக்கு இந்தியாவில் அதிக பிரபலம் கிட்டியது. இதனை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி காரின் புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பிஎம்டபிள்யூ.

பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 760எல்ஐ ஹை செக்யூரிட்டி என்ற மாடலில் கிடைக்கும். இந்த கார் பிஆர்வி2009 என்ற சர்வதேச தர நிர்ணயத்தின்படியான பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. உலகில் விற்பனையாகும் இதுபோன்ற கூடுதல் பாதுகாப்பு கொண்ட கார் மாடல்களில் சிறந்ததாகவும் கூறப்படுகிறது.


 தோற்றம்

தோற்றம்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காருக்கும் இந்த ஹை செக்யூரிட்டி மாடலுக்கும் தோற்றத்தில் வித்தியாசங்கள் காண முடியாது. அதேநேரத்தில் இந்த ஹை செக்யூரிட்டி மாடலில் உறுதிமிக்க சேஸீயும், பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்பும் கொண்டது.

விருப்பம்போல் வசதிகள்

விருப்பம்போல் வசதிகள்

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்பவும், சரியான விலையிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும், வசதிகளையும் கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறது பிஎம்டபிள்யூ கார் நிறுவனம்.

சொகுசு கார்

சொகுசு கார்

கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொண்டிருப்பதால் அதிக எடைகொண்டதாக இருக்கும். அதேநேரத்தில் சொகுசான பயணத்தையும், வசதிகளையும் ஒருங்கே வழங்கும். மேலும், வாடிக்கையாளர் நலன் கருதி காரில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வசதிகள் குறித்த விபரத்தை பிஎம்டபிள்யூ வெளியிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர்களுக்கு விசேஷ பயிற்சி

ஓட்டுனர்களுக்கு விசேஷ பயிற்சி

இந்த காரில் இருக்கும் பாதுகாப்பு வசதிகளை உரிய நேரத்தில் இயக்குவதற்கும், அவசர காலங்களில் காரை எவ்வாறு இயக்கி பயணிகளை பத்திரமாக கொண்டு செல்வது என்பது குறித்து வாடிக்கையாளர்களின் டிரைவருக்கு சிறப்பு பயிற்சியை பிஎம்டபிள்யூ தனது நிபுணர்களின் வாயிலாக வழங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி எடிசன் காரின் எஞ்சின் அதிகபட்சமாக 439 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டிவிடும். 6 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

மோப்ப சக்தி

மோப்ப சக்தி

வெடிகுண்டுகளை கண்டறியும் வெப்ப சென்சார்கள், செயற்கைகோள் தொடர்பு சாதனம் போன்ற பல வசதிகள் உள்ளன. ஏவுகணை மற்றும் ரசாயனத் தாக்குதலிலிருந்து கூட பாதுகாப்பு தரும்.

 பொதுவான பாதுகாப்பு வசதிகள்

பொதுவான பாதுகாப்பு வசதிகள்

குண்டு துளைக்காத கண்ணாடிகள், கண்ணி வெடி மற்றும் குண்டு வெடிப்புகளில் சேதமடையாத பாடி, தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ரன் ஃப்ளாட் டயர்கள் ஆகியவை இந்த காரில் இருக்கும் பொதுவான பாதுகாப்பு வசதிகளாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 13, 2014, 13:04 [IST]
English summary

 The latest version of the BMW 7-Series High Security (760Li High Security) is now available in India. This is the same high security car that's used by the Prime Minister of India, albeit in its standard form.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+