வருகிறது புதிய பிஎம்டபிள்யூ 9 சீரிஸ் ஆடம்பர கார்!
ஏராளமான சொகுசு அம்சங்களுடன் புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 9 சீரிஸ் காரின் கான்செப்ட் மாடல் விரைவில் நடைபெற இருக்கும் பீஜிங் சர்வதேச மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிஎம்டபிள்யூவின் செடான் கார்களில் அதிக சொகுசு அம்சங்களை கொண்டதாக இருக்கும். இது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் அடிப்படை டிசைன் தாத்பரியங்களுடன், ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரின் அதே கட்டமைப்பில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை இல்லை. மேலும், பினின்ஃபரீனா கிரான் லஸ்ஸோ கூபே டிசைனின் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்படுவதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
இன்னும் கொஞ்சம் சொகுசாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் காரை பார்த்து கூறும் வாடிக்கையாளர்களின் வாயை அடைக்கும் அம்சங்களுடன் இந்த புதிய சொகுசு காரை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.
இன்றைய ஃபேஸ்புக் வீடியோ: காணத்தவறாதீர்!


Click it and Unblock the Notifications








