எலக்ட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயாரிக்கும் பிஎம்டபிள்யூ- டெய்ம்லர்!

By Saravana

எலக்ட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை உருவாக்கும் முயற்சியில் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மற்றும் டெய்ம்லர் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய வயர்லெஸ் சார்ஜர் எலக்ட்ரிக் கார் உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண வயர் மூலம் சார்ஜ் செய்வதைவிட இந்த கம்பியில்லா மின்சார மாற்றி தொழில்நுட்பம் மிக சிறப்பான செயல்திறன் கொண்டதாக இருக்கும். மேலும், மிக எளிமையான தொழில்நுட்பமாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


இயங்கும் விதம்

இயங்கும் விதம்

வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர்களை போன்றே அதே தொழில்நுட்பத்திலேயே இது இயங்கும். இரண்டு காந்த விசை கொண்ட தகடுகள் வழியாக வயர்லெஸ் முறையில் மின்சாரம் வீட்டிலிருந்து காரின் பேட்டரிக்கு கடத்தப்படும். இதற்காக, வீட்டின் பார்க்கிங் பகுதியில் ஒரு காந்த விசை தகடு பதிக்கப்பட வேண்டும்.

எளிமையான நுட்பம்

எளிமையான நுட்பம்

வீட்டில் பார்க்கிங் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் காந்தவிசை தகடுக்கு கீழே காரை கொண்டு சென்று நிறுத்திவிட வேண்டும். பின்னர் காரில் இருக்கும் சார்ஜ் பொத்தானை அழுத்தினால், காரில் பொருத்தப்பட்டிருக்கும் காந்தவிசை தகடு வைஃபை போன்று கீழேயிருக்கும் காந்தவிசை தகட்டுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு மின்சாரத்தை பேட்டரிக்கு கடத்தும். இந்த புதிய வயர்லெஸ் சார்ஜர் மூலம் 2 மணி நேரத்தில் முழு சார்ஜ் செய்து விட முடியுமாம்.

மின் கடத்தும் திறன்

மின் கடத்தும் திறன்

இந்த காந்தவிசை தகடுகள் 3.6 kW மின்சாரத்தை கடத்தும் திறன் கொண்டவையாக இருக்கும். மேலும், அதிக சக்திவாய்ந்த பேட்டரிகளையும் இந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தை கடத்த முடியும். அதாவது 7kW வரையில் மின்சாரத்தை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டிலிருந்து காரின் பேட்டரிக்கு மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சோதனை நிலை

சோதனை நிலை

தற்போது சோதனை நிலையில் இந்த புதிய தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், கூடிய விரைவில் இதனை வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்துவிட முடியும் என்று பிஎம்டபிள்யூ- டெய்ம்லர் கூட்டணி நம்பிக்கை தெரிவிக்கிறது.

முதல் கார்

முதல் கார்

பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் மற்றும் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்களில் இந்த புதிய வயர்லெஸ் சார்ஜர் சாதனம் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேவேளை, இந்த புதிய வயர்லெஸ் சாதன தொழில்நுட்பத்தை பிற நிறுவனங்களுக்கும் பிஎம்டபிள்யூ- டெய்ம்லர் கூட்டணி வழங்குமா என்பது குறித்து தகவல் இல்லை.

 ஸ்மார்ட்போனில் தகவல்

ஸ்மார்ட்போனில் தகவல்

சார்ஜ் ஆவது பற்றிய நிலவரத்தை ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் தெரிந்துகொள்ள முடியுமாம்.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

பிஎம்டபிள்யூ - டெய்ம்லர் தவிர்த்து டொயோட்டா மற்றும் நிசான் கார் நிறுவனங்களும் இதுபோன்ற வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்தை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, July 14, 2014, 16:43 [IST]
English summary
German luxury car manufacturer BMW will join hands with Daimler to develop a wireless car charging technology. The new technology by the German duo will enable electric car owners to charge their vehicles wirelessly.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+