கோலாலம்பூர் மெட்ரோ ரயிலை வடிவமைத்து கொடுத்த பிஎம்டபிள்யூ!
ஆசியாவின் புதிய தொழில்துறை மையமாக மாறி வரும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புதிதாக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. 2017 முதல் துவங்கப்பட இருக்கும் இந்த புதிய மெட்ரோ ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ள புதிய மெட்ரோ ரயில்களை பிஎம்டபிள்யூவின் அங்கமாக செயல்படும், அமெரிக்கப் பிரிவு பிஎம்டபிள்யூ டிசைன்ஒர்க்ஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது.
இந்த திட்டம் சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. மலேசியாவை சேர்ந்த மாஸ் ரேபிட் டிரான்ஸ்சிட் கார்ப்பரேஷன் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனம் இந்த மெட்ரோ ரயில் பாதை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கோலாலம்பூரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இந்த புதிய மெட்ரோ ரயில் சேவை மூலம் கோலாலம்பூரின் வர்த்தக வாய்ப்புகள் பெருகும் என்பதோடு, போக்குவரத்து தேவைகளும் சிறப்பாக நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமென்ஸ் ரயில்
சீமென்ஸ் நிறுவனத்தின் மெட்ரோ இன்ஸ்பிரோ சிஸ்டம் அடிப்படையில் இந்த புதிய மெட்ரோ ரயில்களை பிஎம்டபிள்யூ டிசைன்ஒர்க்ஸ் வடிவமைத்துள்ளது.

டிரைவரில்லா ரயில்கள்
மொத்தம் 58 மெட்ரோ ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். இவை அனைத்தும் டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி வசதி கொண்டது.

வசதிகள்
ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 4 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். எல்இடி விளக்குகள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக ஏறி, இறங்குவதற்கான வசதிகளுடன் இருக்கும்.

ஸ்மூத்தான பயணம்
இந்த மெட்ரோ ரயில்களில் பெரிய அளவிலான சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால், அதிர்வுகள் மற்றும் சப்தம் மிக குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுட்காலம்
இந்த ரயில்கள் 30 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும். மேலும், இந்த ரயில்களின் 95 சதவீத பாகங்களை மீண்டும் மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் விசேஷம்.


Click it and Unblock the Notifications








