மரத்தில் மோதி பீஸ் பீஸான பிஎம்டபிள்யூ கார்: லூதியானாவில் பயங்கர விபத்து!

லூதியானாவில் அதிவேகத்தில் வந்த பிஎம்டபிள்யூ கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்கள் அனைவரும் 25 முதல் 27 வயதுடையவர்கள். விபத்தில் இறந்தவர்கள் ககன் ஷர்மா, ரஜ்ஜத் துவா என்று தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தானி ராம் என்பவர்தான் காரின் உரிமையாளராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கிய பிஎம்டபிள்யூ கார் மோதிய வேகத்தில் 3 துண்டுகளானது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக லூதியானா நகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


அதிவேகம்

அதிவேகம்

விபத்தில் வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

துண்டு துண்டானது

துண்டு துண்டானது

இந்த விபத்தில் சிக்கிய பிஎம்டபிள்யூ கார் மோதிய வேகத்தில் 3 துண்டுகளானதுடன், ஒவ்வொரு துண்டும் வெவ்வேறு பகுதியில் தூக்கி வீசப்பட்டு கிடந்தது.

குடிபோதையா?

குடிபோதையா?

காரில் வந்த இளைஞர்கள் குடிபோதையில் இருந்தார்களா என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விசாரணை

விசாரணை

இந்த விபத்துக்கான காரணம் குறித்து லூதியான போலீசார் சட்டப் பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவனம் தேவை

கவனம் தேவை

ஏபிஎஸ், ஏர்பேக், டிரைவ் அசிஸ்ட் என்று எத்தனை பாதுகாப்பு அம்சங்களை கொண்ட காராக இருந்தாலும், அதிவேகத்தில் சென்றால் இதுதான் நிலை என்பதை உணர்ந்து கார் ஓட்டுவது அவசியம். இதுபோன்று வருவதால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

Photos: I Love Ludhiana

More from DriveSpark

Article Published On: Wednesday, October 29, 2014, 9:52 [IST]
English summary
Two persons were killed while another was critically injured when their BMW car veered off the road and hit a road side tree at wee hours in Ludhiana.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+