புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் டெலிவிரி துவங்கியது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் டெலிவிரி துவங்கியுள்ளது. ஜெர்மனியின் மூனிச் நகரில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 8 ஐ8 ஸ்போர்ட்ஸ் கார்கள் ஜெர்மனியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கார்களிலும் லேசர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருந்தன. இவை வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்பேரில் கூடுதல் விலையுடன் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ வரிசையில் வெளியிடப்பட்ட ஹைபிரிட் மாடல்களில் ஐ3 காரைத் தொடர்ந்து தற்போது ஐ8 காரின் டெலிவிரியும் துவங்கியிருக்கிறது. ஜெர்மனியில் இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் டெலிவிரி துவங்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் இந்த காருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆவலையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணாலாம்.

கார்பன் ஃபைபர் பாடி
இந்த காரில் கார்பன் ஃபைபர் மற்றும் இலகு எடை பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த காரின் எடை வெறும் 1,490 கிலோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார்
ஹைபிரிட் நுட்பம் கொண்ட இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவரை பின்புற வீல்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் முன்புற சக்கரங்களுக்கும் பவரை கடத்தும்.

பவர்
பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிகபட்சமாக ஹைபிரிட் நுட்பத்தில் 357 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

மைலேஜ்
ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கணக்கீட்டின்படி, ஒரு லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு
பிஎம்டபிள்யூ ஐ8 அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் கடந்து விடும்.

ரேஞ்ச்
பெட்ரோல் மற்றும் பேட்டரி சார்ஜ் மூலம் 500 கிமீ வரை இந்த ஸ்போர்ட்ஸ் கார் செல்லும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.


Click it and Unblock the Notifications








