ஏர்பேக்கில் பிரச்னை: பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு ரீகால்!
முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக்கில் பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் முதல் 2006 ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களின் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக்கில் பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெற பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது. ஏர்பேக்கில் இருக்கும் கேஸ் ஜெனரேட்டர்கள் ஏர்பேக் விரிவடைவதில் தடை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் இந்த ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் 16 லட்சம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட கார்கள் அனைத்தையும் திரும்ப அழைத்து சோதனை செய்யப்படும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. பிரச்னையை சரிசெய்து தருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா, நிசான், ஹோண்டா மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் ஏர்பேக்குகளை ஒரே நிறுவனத்திடமிருந்து சப்ளை பெற்றுள்ளன. எனவே, ஒரே பிரச்னையை காரணம் காட்டி இந்த திரும்ப பெறும் நடவடிக்கையை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








