அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

அடுத்த மாதம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைகக்கு வருகிறது.

கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

BMW X3 Facelift

2015 மாடலாக குறிப்பிடப்படும் இந்த எஸ்யூவியின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கிரில், அகன்ற ஹெட்லைட், முன்புறம் மற்றும் பின்புறத்தில் கவர்ச்சியான புதிய பம்பர்கள் ஆகியவை வெளிப்புறத்தில் முக்கிய மாற்றங்கள்.

இந்த புதிய மாடலில் 190 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட எஞ்சினும் கூட. அடுத்ததாக, டாப் என்ட் மாடலில் 258 பிஎஸ் பவரையும், 560 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ரூ.43 லட்சம் முதல் ரூ.55 லட்சத்திற்குள்ளான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி க்யூ5, மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் கிளாஸ் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியான மாடலாக கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 26, 2014, 15:29 [IST]
English summary
Luxury automaker BMW is all set to introduce their new X3 SUV facelift in India just ahead of the festive season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+