ஸ்நாப்டீல் தளத்தில் ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவு!
வரும் 25ந் தேதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு ஆன்லைனிலும் முன்பதிவு செய்யப்படுகிறது.
இதற்காக, ஸ்நாப்டீல் இணையதளத்துடன் மஹிந்திரா ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.20,000 முன்பணத்துடன் ஸ்நாப்டீல் தளத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசைனில் பல்வேறு மாற்றங்களுடன் வரும் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை, எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கூடுதலான விலையில் புதிய ஸ்கார்ப்பியோ மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








