புகாட்டி வேரான் காரின் கடைசி ஸ்பெஷல் எடிசன் மாடல் இதுதான்!
புகாட்டி வேரான் காரின் கடைசி ஸ்பெஷல் எடிசன் மாடலின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெபுள் பீச் ஆட்டோமொபைல் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய கார் புகாட்டி நிறுவனர் எட்டோர் புகாட்டியின் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது.
புகாட்டியுடன் தொடர்புடையவர்கள் பெயரில் வெளியிடப்பட்டு வரும் லெஜன்ட் ஸ்பெஷல் எடிசன் வரிசையில் ஆறாவது மற்றும் கடைசி ஸ்பெஷல் எடிசன் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் தகவல்கள்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

ரோட்ஸ்டெர்
புகாட்டி வேரான் காரின் லெஜன்ட்ஸ் சிறப்பு பதிப்பு மாடல்கள் அனைத்தும் ரோட்ஸ்டெர் மாடல்களாவே இருந்துள்ளன. அந்த வரிசையில், இந்த புதிய மாடலும் ரோட்ஸ்டெர் பாடி ஸ்டைல் கொண்டது.

எஞ்சின்
இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலில், 1,184 எச்பி பவரை அளிக்கும் 8.0 லிட்டர் டபிள்யூ16 குவாட் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்
இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 2.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 408 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் கொண்டது.

அதிவேக ரோட்ஸ்டெர்
இந்த காரை உலகின் அதிவேக ரோட்ஸ்டெர் மாடலாகவும் புகாட்டி தெரிவிக்கிறது.

டிசைன்
1932ம் ஆண்டு டைப் 41 ராயல் என்ற பிரபல புகாட்டி காரின் டிசைன் தாத்பரியங்கள் சிலவற்றை எடுத்து இந்த எட்டோர் எடிசன் வேரான் காரில் கையாண்டுள்ளனர். முன்புறம் அலுமினியம் பாலிஷ் செய்யப்பட்டிருக்கிறது. பின்புற பேனல்கள் கருநீல கார்பன் ஃபைபர் பேனல்கள் பொருத்தி அழகு சேர்த்துள்ளனர். டைமன்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை
எட்டோர் எடிசன் புகாட்டி வேரான் கார் 3.14 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








