முதல் ஓர் ஆண்டுக்கு EMI ஃப்ரீ... ஸ்கோடா ரேபிட் காருக்கு சிறப்பு திட்டம்!
ஸ்கோடா ரேபிட் காரை வாங்குவதற்கு எளிதான சந்தர்ப்பத்தை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த காருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு கடன் திட்டத்தில் ரேபிட் காரை வாங்குவோர் முதல் ஓர் ஆண்டுக்கு மாதத் தவணை கட்டத் தேவையில்லை. இந்த சிறப்பு கடன் திட்டத்தில் ரேபிட் காரை வாங்குவோர் ரூ.1.87 லட்சத்தை முன்பணமாக கட்டி காரை டெலிவிரி எடுத்து செல்லலாம்.

2015ம் ஆண்டு காருக்கு மாதத் தவணை கட்டத் தேவையில்லை. 2016ம் ஆண்டிலிருந்து மாதத் தவணையை செலுத்த துவங்கலாம். அதன் பின்னர் மாதாமாதம் ரூ.17,563ஐ மாதத்தவணையாக செலுத்த வேண்டும். ஆனால், எத்தனை ஆண்டுகளுக்கான மாதத் தவணை திட்டம் என்பது குறித்த தெரிவிக்கப்படவில்லை.
மேலும், முதலில் முன்பதிவு செய்யும் 50 வாடிக்கையாளர்களுக்கு கார்மின் போர்ட்டபிள் நேவிகேஷன் மற்றும் ரிவர்ஸ் கேமராவை பரிசாக பெறும் வாய்ப்பு இருக்கிறது. முன்பதிவு செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








