கடந்த ஆண்டு கார் விற்பனை 10 சதவீதம் வீழ்ச்சி

By Saravana

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவாக கடந்த ஆண்டு கார் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 18.07 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளதாகவும், அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 10 சதவீதம் வீழ்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டுக்கு பின்னர் கார் விற்பனையில் இந்தளவு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் சியாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Car

இதுகுறித்து சியாம் அமைப்பின் இயக்குனர் விஷ்ணு மாத்தூர் கூறுகையில்," கடந்த ஆண்டு மிக மோசமான நிலையை கடந்த ஆண்டு சந்தித்தோம். விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் கார் கடனுக்கான வட்டி உயர்வு போன்ற காரணங்கள் சேர்ந்து ஒட்டுமொத்த கார் மார்க்கெட்டையும் கடந்த ஆண்டு உலுக்கிவிட்டது," என்றார்.

இந்த நிலையில், வாகன மார்க்கெட்டுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, இருசக்கர வாகன மார்க்கெட் 4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதே மந்த நிலை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கணிப்பு தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2014, 15:12 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+