பாராளுமன்றத் தேர்தல்: புதிய கார் அறிமுகத்தை தள்ளிப்போட்ட கார் நிறுவனங்கள்!
பாராளுமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை புதிய கார்களை அறிமுகப்படுத்துவதை கார் தயாரிப்பாளர்கள் ஒத்தி போட்டுள்ளனர்.
சமீப காலத்தில் மிகப்பெரிய அளவில் மந்த நிலையை வாகன மார்க்கெட் சந்தித்து வருகிறது. இருப்பினும், புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதில் கார் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தனர். மேலும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட பல புதிய மாடல்கள் தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில், தற்போது பாராளுமன்றத் தேர்தல் துவங்கியுள்ளதையடுத்து, புதிய கார் மாடல்களின் அறிமுகத்தை தேர்தல் முடியும் வரை ஒத்தி போட கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். புதிய அரசாங்கம் அமைந்தவுடன் புதிய பொருளாதார கொள்கைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
மேலும், வாகன மார்க்கெட்டிற்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே, வாகன மார்க்கெட்டில் உயர்வு ஏற்படும் என்று தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் குறித்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதனால், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்ய பல முன்னணி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. எனவே, அடுத்த ஓரிரு மாதத்திற்கு புதிய மாடல்களின் அறிமுகங்கல் இருக்காது என்றே தெரிகிறது.
மேலும், வரும் அக்டோபர் முதல் வாகன மார்க்கெட் உயர்வு பெறும் என்று வாகன நிறுவனங்கள் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








