கார்ஸ் வழங்கும் 24 மணி நேர சாலை உதவி திட்டம்!!
மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை நடத்தி வரும், கார்ஸ் நிறுவனம் தற்போது கார்களுக்கான 24 மணி நேர சாலை உதவி சேவை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் நிம்மதியான பயணத்துக்கு உறுதி கொடுக்கும் வகையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புதிய சேவை திட்டத்தை அறிவித்துள்ளது.

மேப்ஃப்ரீ அசிஸ்டன்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் இந்தியா அசிஸ்டென்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை கார்ஸ் செயல்படுத்த உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 2,200க்கும் அதிகமான நகரங்களிலிருக்கும் 2,600க்கும் மேற்பட்ட கார் சர்வீஸ் மையங்கள் மற்றும் டீலர்களுடன் கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
சில்வர், கோல்டு மற்றும் பிளாட்டினம் ஆகிய மூன்றுவித கட்டணங்கள் கொண்டதாக கார்ஸ் அசிஸ்ட் சேவையை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தற்போது 15 மல்டி பிராண்டு சர்வீஸ் மையங்களை நடத்தி வருவதாகவும், அடுத்த 4 ஆண்டுகளில் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்கவும் கார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கார்ஸ் 24 மணி நேர சாலை உதவி திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்த தகவல்களை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








