செவர்லே அத்ரா காம்பெக்ட் எஸ்யூவி கான்செப்ட்டின் டீசர் வெளியீடு!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் செவர்லே காம்பெக்ட் எஸ்யூவி கான்செப்ட்டின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அத்ரா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவியின் கான்செப்ட் செவர்லேயின் காமா2 பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய தொழில்நுட்ப மையத்தில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் 77 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. விற்பனைக்கு வரும்போது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மினி எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும்.
அத்ரா என்றால் சமஸ்கிருதத்தில் மலை என்று அர்த்தமாம்.


Click it and Unblock the Notifications








