டெல்லியில் அறிமுகமாகும் புதிய செவர்லே பீட் காரின் டீசர் வெளியீடு
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய செவர்லே பீட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இது சிறிய அளவிலான மாற்றங்களுடன் வரும் ஃபேஸ்லிஃப்ட் மாடல். வாகன இணையதளங்களில் வெளியான ஸ்பை ஷாட் படங்களின் மூலம் போதிய தகவல்கள் வெளியாகவில்லை.

புதிய பீட் காரில் கூரையுடன் சேர்ந்த ரியர் ஸ்பாய்லர் கொண்டதாக இருப்பது தெரிகிறது. வழக்கம்போல் முகப்பு கிரில், ஹெட்லைட், பம்பர் போன்றவற்றில் மாறுதல்களுடந் புதிய பீட் கார் வர இருக்கிறது.
மேலும், புதிய சென்ட்ரல் கன்சோல் மற்றும் பின்புற இருக்கையின் நடுவில் ஹெட்ரெஸ்ட் போன்ற புதிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.
எஞ்சின் ஆப்ஷன்களில் மாறுதல்கள் இருக்காது. 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் எல்பிஜி மாடலிலும் வருகிறது.
வரும் 5ந் தேதி புதிய செவர்லே பீட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதவிர, செயில் யுவா, என்ஜாய், ட்ரெயில்ப்ளேசர் எஸ்யூவி ஆகிய மாடல்களையும், 2013 கார்வெட் மற்றும் கமாரோ விளையாட்டு ரக கார்களையும் காட்சிக்கு வைக்க இருக்கிறது செவர்லே.


Click it and Unblock the Notifications








