செவர்லே பீட் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது! - விபரம்
டிசைனில் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய செவர்லே பீட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
செவர்லே பிராண்டின் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை கொண்ட மேம்படுத்தப்பட்ட பீட் மாடலின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்கல் ஸ்லைடரில் உள்ளன.

டிசைன்
மறுவடிவமைப்பு பெற்ற முன்பக்க கிரில், பனி விளக்குகள் மற்றும் ஹெட்லைட்டுகள் கவர்ச்சியை கூட்டியுள்ளன. டெயில்லைட்டுகளின் டிசைனும் மாற்றம் கண்டுள்ளன. பின்புறத்தில் ரிஃப்லெக்டர் ஸ்டிக்கருடன் கூடிய டியூவல் டோன் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

ரியர் ஸ்பாய்லர்
கூரையுடன் இயைந்த ரியர் ஸ்பாய்லரில் எல்இடி ஸ்டாப் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
சூப்பர் ரெட், காக்டெயில் க்ரீன், சான்ட்ரிஃப்ட் கிரே, சுவிட்ச் பிளேடு சில்வர், சம்மிட் ஒயிட், மிஸ்டி லேக், லினென் பீஜ் மற்றஉம் கேவியர் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

வசதிகள்
உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி கொண்ட டிரைவர் இருக்கை, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவை குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகின்றன.

எஞ்சின்
முந்தைய மாடலில் இருந்த அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில் எல்பிஜி மாடலுடன் கிடைக்கிறது.

விலை
ரூ.4.06 லட்சம் முதல் ரூ.6.10 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








