விற்பனைக்கு பின் ஒருங்கிணைந்த சேவைகளை தரும் செவர்லேயின் அதிரடி திட்டம்!

By Saravana

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், விற்பனைக்குப் பின் தேவைப்படும் சேவை திட்டங்களை ஒருங்கே பெறும் வகையில் புதிய திட்டத்தை செவர்லே அறிவித்துள்ளது.

கம்பளீட் கேர் என்ற பெயரில் இந்த புதிய திட்டத்தை செவர்லே கார் நிறுவனம் அறிவித்துள்ளது. விற்பனைக்கு பின் கார் பராமரிப்பு மற்றும் அவசர காலத் திட்டங்களை வாடிக்கையாளர்கள் எளிதாக பெறுவதற்கு இது வழிவகைச் செய்யும். இந்த திட்டத்தில் அடங்கியிருக்கும் சிறப்புச் சேவைகளை தனித்தனியாக ஸ்லைடரில் காணலாம்.


ஒருங்கிணைந்த திட்டம்

ஒருங்கிணைந்த திட்டம்

கூடுதல் பராமரிப்பு செலவீனத்தை திரும்ப பெறும் செவர்லே பிராமிஸ் திட்டம், சிறப்பு வாரண்டி திட்டங்கள், பெண்களுக்கான யு-ஃபர்ஸ்ட் திட்டம், 24 மணிநேர சாலை அவசர உதவி திட்டம் மற்றும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை பெறும் வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கம்ப்ளீட் கேர் திட்டத்தை செவர்லே அறிவித்துள்ளது. சவாலான கட்டணத்தில் இந்த புதிய திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் விபரங்களை தனித்தனியாக காணலாம்.

 செவர்லே பிராமிஸ்

செவர்லே பிராமிஸ்

குறைந்த பராமரிப்பு செலவீனத்தை உறுதி செய்யும் விதத்தில் 3 ஆண்டுகள் அல்லது 45,000 கிமீ தூரத்துக்கான பராமரிப்பு செலவீனத்திற்கான உச்ச வரம்பை செவர்லே நிர்ணயித்துள்ளது. ஒருவேளை, பராமரிப்பு கட்டணம் இந்த கட்டணத்தை விஞ்சினால், அதனை வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இது நிபந்தனைகளுக்குட்பட்டது. அந்த கட்டண வரம்பு விபரங்களை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

வாரண்டி திட்டங்கள்

வாரண்டி திட்டங்கள்

பொதுவான வாரண்டி திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ.,க்கான வாரண்டியை பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர, அடுத்த 2 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிமீ.,க்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தை மிக குறைவான கட்டணத்தில் பெற்றுக் கொள்ளலாம். தவிர, ஸ்பேர்ட் பார்ட்ஸ் மற்றும் ஆக்சஸெரீஸ்கள் மீது ஓர் ஆண்டு அல்லது 20,000 கிமீ.,க்கான வாரண்டியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

 செவர்லே யு-ஃபர்ஸ்ட்

செவர்லே யு-ஃபர்ஸ்ட்

இது பெண் வாடிக்கையாளர்களுக்கான சிறப்புத் திட்டம். இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காரை சர்வீஸ் மையத்துக்கு எடுத்துச் சென்று, பின்னர் வீட்டுக்கு கொண்டு வந்துவிடப்படும். மேலும், சர்வீஸுக்கு ஆகும் செலவை ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.

சாலை அவசர உதவி

சாலை அவசர உதவி

புதிதாக வாங்கப்படும் அனைத்து செவர்லே கார்களுக்கும் முதல் 3 ஆண்டுகளுக்கு இந்த சாலை உதவித் திட்டம் பொருந்தும். காரை அருகிலுள்ள செவர்லே டீலர்ஷிப்புக்கு கொண்டு செல்வது, டயர் மாற்றுவது, எரிபொருள் தீர்ந்துவிட்டால், குறிப்பிட்ட அளவு எரிபொருள் தருவது, ஜம்ப் ஸ்டார்ட் செய்து காரை இயக்க உதவுவது, கார் பழுதாகிவிட்டால் வாடகை கார் பெற்றுத் தருவது போன்ற பல சேவைகளை செவர்லே வழங்குகிறது.

 ஸ்மார்ட்போன் ஆப்

ஸ்மார்ட்போன் ஆப்

ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் சர்வீஸ் செலவீனத்தை கணக்கிட்டுக் கொள்வதற்கும், அருகிலுள்ள டீலர்ஷிப் மற்றும் முகவரிகளை தெரிந்துகொள்வதற்குமான ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களையும் செவர்லே வழங்குகிறது. விற்பனைக்கு பிந்தைய இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களிடம் அதிக நம்பிக்கையை பெற முடியும் என்று செவர்லே கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 13, 2014, 16:15 [IST]
English summary
In a bid to provide customers with the real picture of things, the company has launched the Chevrolet Complete Care programme. This programme is designed to attract potential customers by offering them one of the best after sales service provided by automakers in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+