புதுப்பொலிவுடன் வரும் செவர்லே க்ரூஸ் கார் - படங்கள் வெளியீடு
புதுப்பொலிவு பெற்றுள்ள செவர்லே க்ரூஸ் செடான் கார் நாளை நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக காரின் படங்களை செவர்லே வெளியிட்டிருக்கிறது.
2 ஆண்டுகளில் புத்தம் புதிய செவர்லே க்ரூஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இடைப்பட்ட காலத்தில் போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை செவர்லே களமிறக்குகிறது. ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய க்ரூஸ் கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மாற்றங்கள்
செவர்லேயின் மலிபு செடான் கார் மற்றும் புதிய இம்பாலா செடான் கார்களிலிருந்து பல டிசைன் அம்சங்கள் எடுத்து இந்த காரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பகல்நேர ரன்னிங் விளக்குகள்
இந்த காரில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இது எல்டி மற்றும் எல்டிஸீ வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

வசதிகள்
ஆன்ஸ்டார், மைலிங்க், வாய்மொழி உணர் திறன் போன்றவற்றுடன் வைஃபை மற்றும் 4ஜி எல்டிஇ ஹாட்ஸ்பாட் போன்ற நவீன தொடர்பு வசதிகளை பெற்று வருகிறது.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. 138 எச்பி ஆற்றலை அளிக்கும் 1.8 லிட்டர் எஞ்சின் மற்றும் 138 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் 151 எச்பி ஆற்றலை அளிக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








