வருகிறது முதலாமாண்டு கொண்டாட்டத்துக்கான ஸ்பெஷல் செவர்லே என்ஜாய்!
இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவுபெறுவதை கொண்டாடும் விதத்தில், செவர்லே என்ஜாய் எம்பிவி காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காம்பெக்ட் எம்பிவி மார்க்கெட்டில் மாருதி எர்டிகாவுக்கு அடுத்து சிறப்பான மாடலாக வலம் வருகிறது செவர்லே என்ஜாய்.
இதுவரை 20,000 என்ஜாய் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதனை கொண்டாடும் விதத்தில் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

குரோம் கிரில்
லிமிடேட் எடிசன் என்ஜாய் எம்பிவி காரில் ஹெட்லைட், டெயில்லைட்டுகளுக்கு குரோம் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கதவு கைப்பிடிகளும் குரோம் பூச்சு கொண்டதாக இருக்கும்.

ரூஃப் ரெயில்
புதிய ரூஃப் ரெயில் மற்றும் ரியர் வியூ கண்ணாடியில் இண்டிகேட்டர் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் இதனை லிமிடேட் எடிசன் மாடலாக தனித்துவப்படுத்தும்.

ஃபாக்ஸ் வுட் ஃபினிஷ்
சென்டர் கன்சோலில் ஃபாக்ஸ் வுட் வேலைப்பாட்டுடன் அழகாக மாறியிருக்கிறது.

எஞ்சின்
எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. 74.8 எச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 10 எச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

விலை
விலை விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், அனைத்து வேரியண்ட்டுகளிலும் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்குமா என்பது குறித்த தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








