செவர்லே என்ஜாய் செய்வதற்கு கிடைத்த ஒரு நல்ல விஷயம்!

By Saravana

முதல் ஆண்டில் கவுரவமான விற்பனையை பதிவு செய்துள்ளது செவர்லே என்ஜாய் எம்பிவி கார். கடந்த ஆண்டு மே மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இதுவரை 21,000 செவர்லே என்ஜாய் கார்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த கவுரவமான விற்பனை எண்ணிக்கையை என்ஜாய் தொட்டிருப்பதை கொண்டாடும் விதத்தில் சிறப்பு பதிப்பு மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியை தரும் ஒரே மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


வாடிக்கையாளர்களும் என்ஜாய்

வாடிக்கையாளர்களும் என்ஜாய்

சிறந்த இடவசதி, சரியான விலை, டீசல் மாடல், போதிய வசதிகள் என வாடிக்கையாளர்களுக்கும் என்ஜாய் மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது. இதன் முக்கிய சிறப்பம்சங்கள் சிலவற்றை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 100.2 பிஎஸ் பவரையும், 131 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,399சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் செயலாற்றுகிறது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 74.8 பிஎஸ் பவரையும், 172.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 1,248சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுவும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும் தரும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மோனோகாக் சேஸீ கட்டமைப்பு உயர் வலிமை கொண்ட ஸ்டீல்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மோதலின் வேகத்தை கிரகித்து பயணிகளை பாதுகாக்கும் 10 மோதல் பாதுகாப்பு உத்திரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார், பின்பக்க வைன்ட்ஷீல்டில் டீஃபாகர், ரியர் வாஷ், சைல்டு லாக் வசதி, எலக்ட்ரானிக் ஆன்ட்டி தெஃப்ட் அமைப்பு, கீ லெஸ் என்ட்ரி, உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

 விலை

விலை

செவர்லே என்ஜாய் எம்பிவி கார் மிக சவாலான விலையில் கிடைக்கும் எம்பிவி கார் மாடல். பேஸ் வேரியண்ட் ரூ.5.74 லட்சம் முதல் கிடைக்கிறது. டாப் வேரியண்ட் ரூ.8.13 லட்சம் விலையில் கிடைக்கிறது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.


More from DriveSpark

Article Published On: Thursday, June 19, 2014, 10:17 [IST]
English summary
The American parent company of Chevrolet had taken a decision to launch the Enjoy MPV in May, 2013. Chevrolet reported selling close to 20,000 MPV's in its maiden year. Now after a year they have managed to almost reach the 21,000 mark.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+