போனியாவில்லை... இந்தியாவில் செவர்லே ஸ்பார்க் கார் உற்பத்தி நிறுத்தப்படுகிறது!

By Saravana

வரும் டிசம்பர் மாதத்துடன் இந்தியாவில் செவர்லே ஸ்பார்க் கார் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவர்லே பிராண்டில் வெளியிடப்பட்ட ஸ்பார்க் கார் பட்ஜெட் செக்மென்ட்டில் சிறந்த கார் மாடலாக இருந்தது. டிசைன், இடவசதி, எஞ்சின் ஆகியவை போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே இருந்தது.

Chevrolet Spark

ஆனால், செவர்லே பிராண்டு வாடிக்கையாளர்களிடம் போதிய நம்பகத்தன்மையை பெறவில்லை என்பதோடு, சர்வீஸ் கட்டமைப்பு வசதிகளிலும் போட்டியாளர்களிடம் இருந்து பின்தங்கியுள்ளது. இதனால், ஸ்பார்க் கார் இந்திய மார்க்கெட்டில் எதிர்பார்த்த அளவு விற்பனையை பதிவு செய்யவில்லை.

இதையடுத்து, இந்தியாவில் ஸ்பார்க் கார் உற்பத்தியை நிறுத்துவதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களின் போட்டியாளரான செவர்லே ஸ்பார்க் காரில் 62 பிஎச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும் 995சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. ரூ.3.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2014, 14:40 [IST]
English summary
General Motors had introduced this vehicle as their budget car. The American manufacturer has now announced that they will be ending the production of their Spark hatchback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+