கூடுதல் அம்சங்களுடன் செவர்லே ஸ்பார்க் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

By Saravana

கூடுதல் சிறப்பம்சங்களுடன் செவர்லே ஸ்பார்க் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான வசதிகளுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது.

இந்த லிமிடேட் எடிசன் செவர்லே ஸ்பார்க் காரில் டேஷ்போர்டுக்கு கீழே மென்மையான வெளிச்சத்தை தரும் ஆம்பியன்ட் ஃபுட் வெல் லைட்டுகள், பீஜ் சீட் கவர்கள், நெக் ரெஸ்ட்டுகள்,ஸ்டீயரிங் வீல் கவர், தரைவிரிப்புகள், இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள் என பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. இதுதவிர, ஸ்பெஷல் மாடல் என்பதை தெரிவிக்கும் வகையில் ஸ்டிக்கர்களும், லிமிடேட் எடிசன் பேட்ஜுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Chevy Spark

கேவியர் பிளாக், சம்மிட் ஒயிட், லினன் பீஜ், சான்ட்ரிஃப்ட் கிரே, வெல்வெட் ரெட், மிஸ்டி லேக் மெட்டாலிக், சுவிட்ச்பிளேடு சில்வர் ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும்.

செவர்லே ஸ்பார்க் காரில் 63 பிஎஸ் பவரையும், 90.3 என்எம் டார்க்கையும் அதிகபட்சம் வழங்கும் 1.0 லிட்டர் எஞ்சின் உள்ளது. மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ.,க்கான வாரண்டியும் கிடைக்கிறது. ரூ.3.44 லட்சம் முதல் ரூ.3.99 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஸ்பார்க் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2014, 16:50 [IST]
English summary
Chevrolet which, is a part of General Motors India have launched a Limited Edition of its Spark hatchback. The hatchback is an entry level vehicle by the manufacturer and is priced INR 3,44,000 ex-showroom Delhi to INR 3,99,000 ex-showroom Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+