இந்தியாவில் 9 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஃபியட்!
வரும் 2016ம் ஆண்டிற்குள் இந்திய மார்க்கெட்டில் 9 புதிய கார் மாடல்களை ஃபியட் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த பட்டியலில் முதலாவதாக ஃபியட் பிராண்டில் அவென்டூரா மற்றும் அபார்த் 500 கார் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

இதைத்தொடர்ந்து, ஜீப் ரேங்க்லர் மற்றும் கிராண்ட் செரோக்கீ சொகுசு எஸ்யூவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த இரு மாடல்களும் சொகுசு கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும்.
மேலும், ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் முதலில் இறக்குமதி செய்தும், பின்னர் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்தும் விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. ஆனால், அது ஜீப் பிராண்டு மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முடிவு செய்யப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற திட்டத்துடன் ஃபியட் செயல்பட்டு வருகிறது. ஆனால், அவை எந்தெந்த மாடல்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மேலும், டீலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பணிகளை ஃபியட் தீவிரமாக செய்து வருகிறது. மேலும், ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடல்களை பிரத்யேக ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








