கிராஷ் டெஸ்ட்டில் மோசமாக 'பல்ப்' வாங்கிய பிரபல கார்கள்!
அமெரிக்காவின் நெடுஞ்சாலை காப்பீட்டுக் கழகம்(IIHS) நடத்திய கிராஷ் டெஸ்ட் சோதனையில் மிக மோசமான மதிப்பீட்டை ஹோண்டா ஜாஸ் கார் பெற்றது. இதைப்போலவே பெரும்பாலன கார் மாடல்கள் இந்த கிராஷ் டெஸ்ட்டில் பல்ப் வாங்கின.
இதன்மூலம், சிறிய கார்களின் பாதுகாப்பு அம்சங்களை கூட்டவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஐஐஎச்எஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த சோதனையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம் என்ற மதிப்பீட்டை பெற்ற கார் மாடல் எது என்பது உள்ளிட்ட விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கிராஷ் டெஸ்ட்
மரத்தில் மோதும்போது அல்லது எதிரில் வாகனத்துடன் மோதும்போது காரின் முன்பகுதி சேதமடைவது மற்றும் கேபினில் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டன. இந்த கிராஷ் டெஸ்ட்டில் டிரைவர் பக்கத்தினை மோதச் செய்து சோதனை செய்யப்பட்டது. பொம்மையை பயன்படுத்தி கார்களை மணிக்கு 64 கிமீ வேகத்தில் மோதச் செய்து மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், ஒரு கார் கூட பாதுகாப்பில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச தர மதிப்பீட்டை பெறவில்லை.

ஒன்று கூட 'குட்' இல்லை
மொத்தம் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட 11 கார்களில் ஒரு கார் கூட நன்று என்ற தர மதிப்பீட்டை பெறவில்லை. இதில், செவர்லே ஸ்பார்க் (இந்தியாவில் பீட்) கார் மட்டுமே 'ஒப்புக் கொள்ளலாம்' என்ற தர மதிப்பீட்டை பெற்றது.

மோசமான கார்
11 கார் மாடல்களில் 2013 ஹோண்டா ஃபிட் (இந்தியாவில் ஜாஸ்) கார்தான் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்றது. பல விதத்திலும் இந்த கார் தர மதிப்பீட்டில் பின்தங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர மாடல்கள்
செவர்லே ஸ்பார்க், மஸ்தா2, டொயோட்டா யாரிஸ், 2014 ஃபோர்டு ஃபியஸ்ட்டா, 2014 மிட்சுபிஷி மிராஜ், நிசான் வெர்சா செடான், டொயோட்டா பிரையஸ் சி, ஹூண்டாய் ஆக்சென்ட், ஃபியட் 500 மற்றும் 2013 ஹோண்டா ஜாஸ் என இந்த கார்கள் தர மதிப்பீடு அடிப்படையில் பட்டியலில் இடம்பிடித்தன.

பாதுகாப்பு முக்கியம்
சிறிய கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்று ஐஐஎச்எஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இவை நகர்ப்புறத்தை விட்டு நெடுஞ்சாலையில் பயன்படுத்தும்போது அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துல்ளது.

பாதுகாப்பான கார் வேணுமா?
2,500 பவுண்ட்டு எடைக்கும் குறைவான கார்களில் இதுபோன்று பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே, பாதுகாப்பை மட்டுமே முக்கியமாக கருதுபவர்கள் இந்த கார்களை விட்டு அடுத்த செக்மென்ட் கார்களை தேர்வு செய்வது நல்லது என்று அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








