டஸ்ட்டரின் பிக்கப் டிரக் மாடல்... ஆர்டரின் பேரில் சப்ளை செய்யும் டேஸியா!

By Saravana

ரெனோ கார் நிறுவனத்தின் துணை கார் பிராண்டான டேஸியா நிறுவனம் டஸ்ட்டர் எஸ்யூவி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், டஸ்ட்டர் எஸ்யூவியின் அடிப்படையிலான பிக்கப் டிரக் மாடல் சோதனை செய்யப்பட்டு வருவதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், ஆர்டரின் பேரில் டஸ்ட்டர் பிக்கப் டிரக் மாடலை டேஸியா நிறுவனம் சப்ளை செய்ய உள்ளது. டஸ்ட்டர் பிக்கப் டிரக் குறித்த கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.


கஸ்டமைஸ் பிக்கப் டிரக்

கஸ்டமைஸ் பிக்கப் டிரக்

ருமேனியாவை சேர்ந்த ரோம்துரின்ஜியா என்ற பிரபல வாகன கஸ்டமைஸ் நிறுவனத்தின் துணையுடன் இந்த பிக்கப் டிரக் மாடல்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது டேஸியா.

 டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

மேம்படுத்தப்பட்ட டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவியின் அடிப்படையில் இந்த பிக்கப் டிரக் மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 500 டஸ்ட்டர் பிக்கப் டிரக்குகளை டேஸியா விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

ஆர்டரின் பேரில்

ஆர்டரின் பேரில்

ஓம்வி பெட்ரோம் என்ற எண்ணெய் நிறுவனத்தின் வேண்டுகோளின்படி, இந்த பிக்கப் டிரக் மாடல்களை சப்ளை செய்ய உள்ளது டேஸியா. மொத்தம் 500 டஸ்ட்டர் பிக்கப் டிரக்குகளில் மாதிரிக்காக 10 பிக்கப் டிரக்குகள் ஏற்கனவே டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டதாம்.

 எஞ்சின்

எஞ்சின்

டஸ்ட்டர் பிக்கப் டிரக் மாடலில் 110எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

இடவசதி

இடவசதி

இந்த பிக்கப் டிரக்கில் பொருட்கள் வைப்பதற்கான பின்புற பெட் பகுதி 1.7 மீட்டர் நீளம் கொண்டது. இதில், 450 கிலோ எடையுடைய பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 8, 2014, 9:48 [IST]
English summary
Romanian car brand Dacia has offered a pickup and now the brand is back on the bed-gifted vehicle market with the Duster Pick-Up.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+