சென்னையில் புதிய பென்ஸ் பஸ் ஆலைக்கு அடிக்கல் நாட்டிய டெய்ம்லர்!
சென்னையில் புதிய பஸ் தயாரிப்பு தொழிற்சாலைக்கு ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் அடிக்கல் நாட்டியுள்ளது.
சென்னை ஒரகடத்தில் செயல்பட்டு வரும் டெய்ம்லரின் பாரத் பென்ஸ் ஆலை வளாகத்திலேயே புதிய பஸ் ஆலையும் அமைய இருக்கிறது. 27.91 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் ஆலை அமைக்கப்பட உள்ளதாக டெய்ம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.425 கோடி முதலீட்டில் அமைக்கப்பட இருக்கும் இந்த புதிய பஸ் ஆலையில் அடுத்த ஆண்டு மத்தியில் இருந்து உற்பத்தி துவங்கப்படும்.
இந்த புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது மூன்று பிராண்டுகளில் டிரக்குகள், பஸ்கள் மற்றும் எஞ்சின்கள் தயாரிக்கும் உலகின் ஒரே டெய்ம்லர் ஆலை என்ற பெருமை சென்னை ஆலைக்கு கிடைக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பாரத் பென்ஸ் பிராண்டுகளிலான பஸ்கள் அசெம்பிளிங் மற்றும் தயாரிப்பு இந்த புதிய ஆலையில் நடைபெறும். இந்த புதிய ஆலை மூலம் தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








