டட்சன் கோ காருக்கு முன்பதிவு துவங்கியது - விபரம்
நடுத்தர வர்க்க வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் டட்சன் கோ காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிசான் டீலர்ஷிப்புகளிலேயே டட்சன் காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4 லட்சம் விலையில் விற்பனைக்கு வர இருக்கும் டட்சன் கோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 பேர் செல்வதற்கான இடவசதியுடன் வரும் இந்த புதிய கார் குறைந்த பராமரிப்பு செலவுடன் சிறந்த மாடலாக இருக்கும் என்று டட்சன் நம்பிக்கையளிக்கிறது.
மேலும், நிசான் ஷோரூம்களிலேயே டட்சன் காருக்கும் இடம் ஒதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இருப்பினும், விற்பனை பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தனியாக மேற்கொள்ளப்பட உள்ளன.
டட்சன் கோ காரை முன்பதிவு செய்ய அருகிலுள்ள நிசான் டீலரை அணுகுமாறும் அல்லது 1800 209 3456 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து விபரங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








