டட்சன் கோ கார் விற்பனைக்கு வரும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டட்சன் கோ காரின் விற்பனை தேதி அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ந் தேதி இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்ட்ரி லெவல் கார் மாடல்களிலேயே சிறந்த இடவசதி மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

டாப் மாடலின் விலையே ரூ.4 லட்சத்திற்குள் இருக்கும் என்பதால், பல வாடிக்கையாளர்கள் இந்த காருக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால், ஏபிஎஸ், ஏர்பேக்குகள் போன்றவை இந்த காரின் டாப் வேரியண்ட்டில் கூட இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
ரூ.11,000 முன்பணத்துடன் டட்சன் கோ காருக்கு முன்பதிவு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








