பெட்ரோலில் மட்டுமே வருகிறது டட்சன் கோ ப்ளஸ்... இப்ப என்ன பண்ணலாம்!
பெட்ரோல் மாடலில் மட்டுமே டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் பெட்ரோலில் வந்தாலும், பின்னர் டீசல் மாடலிலும் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டட்சன் கோ ப்ளஸ் காரை டீசல் மாடலில் அறிமுகம் செய்வதை தவிர்க்க டட்சன் தாய் நிறுவனமான நிசான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், டீசல் விரும்பிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெட்ரோல் மாடல்
டட்சன் கோ ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1,198சிசி பெட்ரோல் எஞ்சினுடன் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரும் வருகிறது. இது 68 எச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். டீசல் மாடல் இல்லை என்பது தெரிந்ததே. மற்றொரு மாடலையும் தவிர்க்க நிசான் முடிவு செய்துள்ளது. அதனை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

இதுவும் இல்லை...
டீசல் மாடல் மட்டுமின்றி ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸையும் டட்சன் கோ ப்ளஸ் காரில் கொடுக்க வேண்டாம் என நிசான் கொள்கை முடிவு எடுத்துள்ளதாம். டீசல் மாடல்களுக்கும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல்களுக்கும் இந்திய மார்க்கெட்டில் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரில் தவிர்ப்பதற்கான காரணம் என்ன என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

பட்ஜெட் பிராண்டு
டட்சன் பிராண்டில் குறைவான விலை கொண்ட கார்களை மட்டுமே விற்பனை செய்ய நிசான் முடிவு செய்துள்ளது. எனவே, டீசல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களை இறக்கினால், விலை அதிகமாக நிர்ணயிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியிருக்கும். எனவே, பட்ஜெட் பிராண்டு என்பதை பரைசாற்றவே டீசல் மாடலையும், ஏஎம்டி மாடலையும் தவிர்க்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அப்படியெனில் விலை என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

வேரியண்ட்
இந்தோனேஷியாவில் ஏ, டி, டி மற்றும் ஆப்ஷன் டி ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் பார்க்கப்போனால் பேஸ் வேரியண்ட் ரூ.4.42 லட்சத்திலுமம், டாப் வேரியண்ட் ரூ.5.36 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதே விலையிலேயே இந்திய மார்க்கெட்டிலும் வர இருப்பதாக உறுதியாக நம்பப்படுகிறது. ஆனால், டீசல் இல்லாமல் எப்படி என்ற கேள்வி எழுபவர்கள் அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

வரவேற்பு இருக்கும்
டீசலும், ஏஎம்டி கியர் பாக்ஸ் இல்லாமலேயே இந்திய மார்க்கெட்டில் டட்சன் கோ ப்ளஸ் காருக்கு அதிக வரவேற்பு இருக்கும் என நிசான் கருதுகிறது. ஏனெனில், மாருதி எர்டிகா, விரைவில் வரும் ஹோண்டா மொபிலியோ கார்களைவிட இதன் விலையை மிக குறைவாக வைத்து மார்க்கெட்டை பிடித்து விட நிசான் திட்டம் போட்டு வைத்துள்ளது. பெட்ரோல் மாடலில் வந்தாலும் மிக குறைவான 7 சீட்டர் காராக இருப்பதால் வாங்கலாம் என நினைப்பவர்கள் வரும் தீபாவளி பண்டிகை வரை காத்திருக்கவும்.

சொல்ல முடியாது...
ஒருவேளை, பெட்ரோல் மாடல் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதபோது டீசல் மாடலை தருவிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அது உடனடியாக இருக்காது என்பதே இப்போதைய தகவல்.


Click it and Unblock the Notifications








