டட்சன் கோ காருக்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர்!
கிராஷ் டெஸ்ட் பிரச்னையில் சிக்கித் தவிக்கும், டட்சன் கோ காரின் விற்பனையை அதிகரிக்க சிறப்புத் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது நிசான் இந்தியா நிறுவனம்.
டட்சன் கோ காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.30,000 வரையிலான தள்ளுபடிச் சலுகையை டிசம்பர் இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.15,000 சிறப்புத் தள்ளுபடியாகவும் வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு இருக்கிறது. டட்சன் கார் டி, டி1 மற்றும் ஏ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.3.12 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.
சமீபத்தில் நடந்த கிராஷ் டெஸ்ட் சோதனையில் பூஜ்ய தர மதிப்பீட்டை பெற்ற இந்திய மாடல்களில் டட்சன் கோ ஹேட்ச்பேக் காரும் இடம்பெற்றது. மேலும், விபத்து சமயங்களில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பற்ற கட்டுமானம் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








