சென்னையில் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் சோதனை - படங்கள்
இந்தியாவில் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரை சென்னையை சேர்ந்த மனோஜ் பிரபாகரன் என்பவர் படம் பிடித்துள்ளார்.
மிக குறைவான விலை கொண்ட 7 சீட்டர் காராக வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஸ்பை ஷாட் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

4 மீட்டர் எஸ்யூவி
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த புதிய எம்பிவி கார் வரிச்சலுகை மட்டும் பெறுவதோடு மட்டுமின்றி, பார்க்கிங் செய்வதற்கான எளிதான எம்பிவி காராகவும் இருக்கும்.

இடவசதி
4 மீட்டருக்குள் சுருக்கப்பட்டாலும், 2,450 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருப்பதால் ஓரளவு நல்ல இடவசதியை அளிக்கும். இது வெறும் 794 கிலோ எடை கொண்ட கார் என்பதால் மைலேஜும் சிறப்பாக இருக்கும்.

எஞ்சின்
டட்சன் கோ ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதிகபட்சம் 68 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 64 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

விலை
இந்தோனேஷியாவில் 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய எம்பிவி கார் 85 மில்லியன் ருபியா விலையிலிருந்து 102.9 மில்லியன் ருபியா விலையில் கிடைக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.4.40 லட்சம் முதல் ரூ.5.24 லட்சம் வரையிலான விலை கொண்டதாகும். அதேவேளை, இந்தியாவில் பேஸ் மாடல் ரூ.4.20 லட்சம் விலையில் வர இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
Photo Credit: Facebook


Click it and Unblock the Notifications








