டட்சன் கோ காருக்கு ஆக்சஸெரீஸ் பேக் - விபரம்!
ரூ.4 லட்சத்தில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டட்சன் கோ காருக்கு மூன்று விதமான அலங்கார பொருட்கள் உள்ளடக்கிய ஆக்சஸெரீஸ் பேக்கேஜிகளை டட்சன் அறிவித்துள்ளது.
இது டட்சன் கோ காரின் மதிப்பையும், கூடுதல் வசதிகளையும் தரும் வகையில் இருக்கின்றன. அதுபற்றிய விபரங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆக்சஸெரீஸ் பேக்
ஃபேமிலி பேக்கேஜ், ஸ்போர்ட் பேக்கேஜ் மற்றும் டிரெண்டி பேக்கேஜ் என்ற பெயரில் இவை விற்பனைக்கு கொடுக்கப்படும்.

விலை
இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ் பேக்கேஜ்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.50,000 வரையிலான விலையில் கிடைக்கும்.

இன்டிரியர்
பேஸ் பேக்கேஜில் பீயேஜ் இன்டிரியர் மற்றும் மிதியடிகள் இருக்கும். ஸ்போர்ட் பேக்கேஜில் கருப்பு மற்றும் சாம்பல் நிறை டியூவல் டோன் இன்டிரியருடன் கிடைக்கும். சீட் கவர்கள், பார்சல் டிரே, ஸ்பீக்கர்கள் ஆகியவையும் இந்த ஆக்சஸெரீஸ் பேக்கேஜை தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

மியூசிக் சிஸ்டம்
ஸ்மார்ட்போனுடன் தொடர்புப்படுத்தும் வசதி கொண்ட சிங்கிள் டின் மியூசிக் சிஸ்டமும் கூடுதல் ஆக்சஸெரீயாக கிடைக்கும்.

ரிவர்ஸ் கேமரா திரை
ரிவர்ஸ் கேமரா மற்றும் திரையும் கூடுதல் ஆக்சஸெரீயாக கிடைக்கும். சக பயணி இருக்கைக்கு எதிரில் பொருத்தப்பட்டிருப்பதை காணலாம்.

அலாய் வீல்கள்
டட்சன் கோ காருக்கு அலாய் வீல்களும் கூடுதல் ஆக்சஸெரீயாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்
டட்சன் காருக்கு கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் கூடுதல் ஆக்சஸெரீயாக வழங்கப்பட உள்ளது.

விற்பனை
அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் டட்சன் கோ காரின் விற்பனை துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.4 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்படும் என்று டட்சன் அதிகாரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








