டட்சன் கோ கார் மீது ரூ.38,000 வரை சேமிப்பு: அதிரடி ஆஃபர்
பண்டிகை காலத்தையொட்டி, டட்சன் கோ காருக்கு சிறப்பு சேமிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பண்டிகை காலத்தில் கார் விற்பனையை அதிகரிக்கும் விதமாக பல முன்னணி நிறுவனங்கள் சிறப்புச் சேமிப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வரிசையில் நிசான் நிறுவனத்தின் அங்கமான டட்சன் பிராண்டும் தற்போது சிறப்பு சலுகைகளை கோ ஹேட்ச்பேக் காருக்கு அறிவித்துள்ளது.
பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து டட்சன் கோ காரை வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ.20,000 சிறப்பு எக்ஸ்சேஞ்ச் போனசாக பெறலாம்.
ரூ.4,000 மதிப்புடைய நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ.4,000 வரையில் இன்ஸ்யூரன்ஸில் சிறப்பு சேமிப்பையும் பெறலாம்.
இதுதவிர, குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.38,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த மாதம் 31ந் தேதி வரை இந்த சிறப்பு சேமிப்பு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என டட்சன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








