டட்சன் பிராண்டின் புதிய செடான் கார் அறிமுகம்: படங்கள்
இந்தியாவில் கோ ஹேட்ச்பேக் காரையும், இந்தோனேஷியாவில் கோ ப்ளஸ் எம்பிவி காரையும் அறிமுகம் செய்துவிட்ட டட்சன் மூன்றாவது மாடலாக ஆன்-டு என்ற புதிய செடான் காரை ரஷ்யாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது.
ரஷ்ய மார்க்கெட்டிற்கு தேவையான அம்சங்களுடன் ஜப்பானில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய செடான் காரும் மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. இநத் புதிய டட்சன் செடான் காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறைவான விலை
இந்த கார் ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ரெனோ கூட்டாளியான ஏவ்டோவாஸ் தயாரிப்பில் வரும் லடா கிரான்ட்டா செடான் காரின் பாகங்களை பங்கிட்டுக் கொள்ளும். இதனால், அந்நாட்டிலேயே உதிரிபாகங்களை பெற்று உற்பத்தி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, மிக சவாலான விலையில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரும்.

தோற்றம்
இது உதிரிபாகங்களை லடா கிராண்ட்டா பாகங்களை பங்கிட்டுக் கொண்டாலும், தோற்றத்தில் ஒற்றுமைகள் அதிகம் தெரியவில்லை. இதன் முகப்பு கிரில் டட்சன் கோ காரை ஒத்திருந்தாலும், தோற்றத்தில் வித்தியாசங்களுடன் புதிய மாடலாகவே தெரிகிறது.

இடவசதி
கோ ஹேட்ச்பேக் கார் போன்றே இந்த புதிய காரிலும் அதிக இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே இதன் முக்கிய பலமாகவும் இருக்கும்.

வடிவம்
இந்த கார் 4,337மிமீ நீளம், 1,700மிமீ அகலம், 1,500மிமீ உயரம் கொண்டது.

பூட் ரூம்
இது 530 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் கொண்டிருக்கிறது.

எஞ்சின்
இந்த காரில் 87 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த காரில் ஆட்டோமேட்டிக் மாடலை அறிமுகப்படுத்தும் திட்டமும் டட்சன் வசம் உள்ளதாம்.

விற்பனை
இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிசான்- ரெனோ கூட்டணி திட்டமிட்டுள்ளது.

விலை
இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் விலையில் ரஷ்ய மார்க்கெட்டில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வருமா?
ஆன் டு காரை 4 மீட்டருக்குள் சுருக்கி இந்திய மார்க்கெட்டில் காம்பெக்ட் செடான் காராக கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதில் அதிக அளவில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இந்த கார் வருமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. எனவே, கோ மற்றும் கோ ப்ளஸ் காரின் அடிப்படையிலேயே புதிய காரை டட்சன் இந்தியா உருவாக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








