புதிய டட்சன் ஹேட்ச்பேக் கார் கான்செப்ட்டின் ஸ்கெட்ச் வெளியீடு!
டட்சன் பிராண்டின் அடுத்த புதிய ஹேட்ச்பேக் கார் கான்செப்ட்டின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக டட்சன் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கான்செப்ட் காரின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் டட்சன் கார்கள் உருவாக்கப்படும். இந்தியா போன்ற வளரும் மார்க்கெட்டுகளில் இளைய வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை கொண்டிருக்கும்.
பிப்ரவரி 5ந் தேதி கிரெட்டர் நொய்டாவில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சியின் 12வது அரங்கில் இந்த புதிய கான்செப்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு நேரடி போட்டியாக வர இருக்கும் புதிய குட்டிக் கார் இந்த கான்செப்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த புதிய கார் ஐ2 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








