ரஷ்யாவில் டட்சன் பிராண்டில் வெளிவரும் செடான் காரின் ஸ்கெட்ச்!
ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டட்சன் செடான் காரின் ஸ்கெட்ச் வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்ய வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த புதிய கார் டிசைன் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிசான் எஞ்சினியர்கள் அடங்கிய குழுவினரை வைத்து ஜப்பானில் டிசைன் செய்யப்பட்டிருகக்கிறது.
வரும் ஏப்ரல் 4ந் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த புதிய டட்சன் செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரஷ்யாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய டட்சன் செடான் காரின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இந்த புதிய கார் விற்பனைக்கு செல்லும்.


Click it and Unblock the Notifications








