ரூ.2 லட்சத்தில் வரும் டட்சனின் புதிய கார் கான்செப்ட் அறிமுகம்!
டட்சன் பிராண்டின் புதிய குட்டிக் காரின் கான்செப்ட் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரெடி- கோ என்ற பெயரிலான இந்த புதிய கான்செப்ட் அடிப்படையில் வடிவமைக்கப்படும் புதிய கார் மாருதி ஆல்ட்டோ - 800 காருக்கு போட்டியாக வர இருக்கிறது.

டிசைன்
இளைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டிசைன் ரொம்ப மாடர்னாக இருக்கிறது. இதன் டிசைன் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறியீட்டுப் பெயர்
இந்த கான்செப்ட்டின் அடிப்படையில் புதிய குட்டிக் கார் ஐ2 என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

எதிர்கால மாடல்கள்
இந்த புதிய கான்செப்ட் அடிப்படையில் எதிர்கால டட்சன் கார்கள் வடிவமைக்கப்பட உள்ளன.

விலை
ஐ2 என்ற பெயரிலான குட்டிக் கார் ரூ.2 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதி
இந்தியாவிலிருந்து இந்த புதிய குட்டிக் கார் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








