விரைவில் விற்பனைக்கு வரும் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்!

By Saravana

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான டிசி அவந்தி விற்பனைக்கு வர இருக்கிறது.

மும்பையை மையமாக கொண்டு செயல்படும், கார் கஸ்டமைஸ் நிறுவனமான டிசி டிசைன்ஸ் இந்த காரை வடிவமைத்து, தயாரிக்க உள்ளது.

DC Avanti

ஏராளமான சிறப்பு வசதிகள் கொண்ட இந்த காரில் மிட் மவுண்டட் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 248 பிஎச்பி பவரை அளிக்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

பாக்ஸ் செக்ஷன் ஃப்ரேம் கொண்ட இந்த கார் 4,550மிமீ நீளமும், 1,965மிமீ அகலமும், 1,200மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டது. கான்டினென்டல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

ரூ.35 லட்சம் விலையில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருக்கும் 500 கார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது. எனவே, இந்த காரை வாங்க பிரியப்படும் வாடிக்கையாளர்கள் அடுத்த லாட்டுக்கு முன்பதிவு துவங்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 6, 2014, 9:15 [IST]
English summary
DC Design company is planning to launch Avanti sports car by early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+